ஒரே தயாரிப்பு நிறுவனத்துக்காக விஜய்-தனுஷ்

  • IndiaGlitz, [Wednesday,October 05 2016]

ஒரே நேரத்தில் இளையதளபதி விஜய்யின் 'தெறி' மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' ஆகிய படங்களை தயாரித்து இரண்டையும் வெற்றி படமாக்கிய பெருமைக்குரியவர் கலைப்புலி எஸ்.தாணு என்பது அனைவரும் தெரிந்ததே.
இதேபோல் தற்போது விஜய் மற்றும் தனுஷ் நடிக்கும் படங்களை பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ளது. ஆம் தமிழ் சினிமாவில் கடந்த பல வருடங்களாக வெற்றி படங்களை கொடுத்து வரும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்தான் அந்த நிறுவனம்
விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள 'விஜய் 61' படத்தை தயாரிக்கவுள்ள ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தையும் தயாரிக்கவுள்ளதாம். முதன்முதலாக ஒரே தயாரிப்பு நிறுவனத்தில் விஜய், தனுஷ் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.