தனுஷின் அடுத்த படத்தின் சிங்கிள் ரிலீஸ்.. இசையமைப்பாளரின் முக்கிய அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்து இயக்கிய ’ராயன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தின் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
தனுஷ் இயக்கிய ’ராயன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவரது இயக்கத்தில் உருவாகி வரும் இன்னொரு திரைப்படம் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. தனுஷின் உறவினர் மகனான பவிஷ் என்பவர் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில் சிறப்பு தோற்றத்தில் தனுஷ் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சற்று முன் தனது சமூக வலைதள பக்கத்தில் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் இடம் பெற்ற ’கோல்டன் ஸ்பேரோ’ என்ற பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
First single of #NEEK … #GoldenSparrow is here to rule soon …… 🔥🔥🔥 sambavam irukku … from our director 🔥@dhanushkraja… @wunderbarfilms @theSreyas pic.twitter.com/Byk8YaJmfM
— G.V.Prakash Kumar (@gvprakash) August 24, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com