தனுஷின் கனவு திரைப்படம் டிராப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Wednesday,December 11 2024]

தனுஷ் நடிக்க இருந்த அவரது கனவு திரைப்படம் டிராப் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்த படத்தின் திரைக்கதை எழுதும் பணியை கமல்ஹாசன் பொறுப்பேற்று அந்தன் பணியும் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்கும் பொறுப்பிலிருந்து சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் விலகியதாகவும் செய்திகள் வெளியானது.

அதன் பிறகு, இந்த படத்தை பற்றி எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது இந்த படம் கைவிடப்பட்டதாகவும், அதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இருப்பினும், இந்த படம் ட்ராப் என்பது குறித்து எந்த விதமான அறிவிப்பும் படக்குழுவினர் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மீண்டும் ஒரு ரசிகர் மரணம்.. 'புஷ்பா 2' படத்திற்கு என்ன ஆச்சு?

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் ரிலீஸ் ஆன அன்று கூட்ட நெரிசல் காரணமாக பெண் ஒருவர் பலியான நிலையில், நேற்று திரையரங்கில் இந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்த

இன்னொரு படத்திற்கும் வாய்ப்பு.. 'சூர்யா 45' இசையமைப்பாளருக்கு குவியும் படங்கள்..!

சமீபத்தில் சூர்யா நடிக்க இருக்கும் 45வது திரைப்படத்தின் இசையமைப்பாளராக அபிநயங்கர் என்பவர் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு இன்னொரு பட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடவுளே அஜித்தே.. ரசிகர்களுக்கு அஜித் விடுத்த வேண்டுகோள்..!

அஜித்தை அவரது ரசிகர்கள் கடந்த சில நாட்களாக 'கடவுளே அஜித்தே' என்று கூறிவரும் நிலையில் அவ்வாறு தன்னை அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்து

முருகன் வழிபாடு: வாழ்க்கை மாற்றும் ரகசியங்கள்!

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் டாக்டர் சம்பத் சுப்பிரமணி அவர்கள் முருகன் வழிபாட்டின் ஆழமான அர்த்தத்தைப் பற்றி பேசுகிறார்.

கூட்டம் கூடுவதற்கும் குவாலிட்டிக்கும் சம்பந்தம் இல்லை: 'புஷ்பா 2' குறித்து தமிழ் நடிகர்..!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா 2' திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவரும் நிலையில், கூட்டம் போடுவதற்கும் குவாலிட்டிக்கும் சம்பந்தமில்லை என 'புஷ்பா 2 'படம்