close
Choose your channels

போட்டி போட்டு அப்டேட் கொடுக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்கள்.. இன்று என்ன தெரியுமா?

Tuesday, July 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து இயக்கி உள்ள ’ராயன்’ படத்தின் அப்டேட்டுகள் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ’குபேரா’ படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்த இயக்கிய ’ராயன்’ திரைப்படம் வரும் 26ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுகள் கிட்டத்தட்ட தினமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்தது. தனுஷின் 50வது படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான ’குபேரா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை 5.04 மணிக்கு ’குபேரா’ படத்தின் சூப்பர் அப்டேட் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் நிகேஷ் பொம்மி ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.