இவருக்கு வயது 36 ஆ? இல்லை 16ஆ? தனுஷ் நாயகியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகையின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் ’இவருக்கு வயது 36ஆ அல்லது 16ஆ என்று பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரை உலகில் சத்யராஜ் நடித்த ’ரிக்சா மாமா’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி. அதன் பிறகு பாக்யராஜின் ’அம்மா வந்தாச்சு’ உள்பட ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர் பின்னர் நாயகியாகவும் சில படங்களில் நடித்தார்.
குறிப்பாக மாதவன் நடித்த ’பிரியமான தோழி’ ஜீவா நடித்த ’தித்திக்குதே’ தனுஷ் நடித்த ’தேவதையை கண்டேன்’ உள்பட பல படங்களில் நடித்தார். மேலும் அவர் ஒரு சில தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் ராகுல் என்பவரை திருமணம் செய்த நிலையில் அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர். அந்த வகையில் அவர் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிங்க் நிறத்தில் காஸ்டியூம் அணிந்து காஸ்ட்யூம் அணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.
ஸ்லிம் ஆன தோற்றம் கொண்ட இந்த போட்டோஷூட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்து ஏராளமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com