close
Choose your channels

அந்தரத்தில் தொங்கிய கேமிராமேன்.. தனுஷ் படத்திற்காக உயிரை பணயம் வைத்த வீடியோ.. !

Wednesday, June 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து வரும் ’குபேரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் ’குபேரா’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக தனுஷ் மற்றும் நாகார்ஜுனா ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் இந்த ஸ்டண்ட் காட்சி படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஸ்டண்ட் காட்சியின் ஒரு முக்கிய காட்சியை படமாக்குவதற்காக கேமராமேன் கயிற்றில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இரண்டு வினாடிகள் கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தனுஷ் படத்தின் காட்சி நன்றாக வர வேண்டும் என்பதற்காக கேமராமேன் தனது உயிரை பணயம் வைத்து பணி செய்த இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தனுஷ் இந்த படத்தில் பிச்சைக்காரராக இருந்து ஒரு டான் ஆக மாறும் கேரக்டரில் நடித்திருப்பதாகவும், நடிகர் நாகார்ஜுனா துப்பறியும் விசாரணை அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.