தற்கொலை செய்ய முடிவெடுத்த தனுஷ் நாயகி.. ஆறுதல் கூறி காப்பாற்றிய ராகுல் காந்தி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ’பொல்லாதவன்’ சிம்பு நடித்த ’குத்து’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரம்யா தனது தந்தை இறந்த சோகத்தில் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாகவும் ஆனால் ராகுல் காந்தி தான் தனக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி காப்பாற்றியதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் கன்னட திரையுலகின் நடிகைகளில் ஒருவரான ரம்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது தந்தையார் மறைவு குறித்து அதில் இருந்து மீண்டு வந்தது குறித்து கூறியுள்ளார். தந்தை இறந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு நான் பாராளுமன்றத்தில் சென்றேன். பாராளுமன்ற நடவடிக்கைகள் எப்படி என்பது கூட எனக்கு தெரியாது. ஆனால் நான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வேலையை கற்றுக் கொண்டேன்.
தந்தை இறந்த காலம் என்பது எனக்கு மிகவும் சோதனையான காலம். என் வாழ்க்கையில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது அம்மா, அடுத்தது என் தந்தை, மூன்றாவது ராகுல் காந்தி தான். நான் என் தந்தையை இழந்த போது துக்கத்தில் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்தேன். அந்த நேரத்தில் நான் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தேன். துக்கம் நிறைந்த அந்த நேரத்தில் ராகுல் காந்தி தான் எனக்கு உதவினார், உணர்ச்சி ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் எனக்கு ஆதரவளித்தார். அவருடைய ஆதரவால்தான் நான் மீண்டு வந்தேன் என்று கூறினார்.
நடிகர் ரம்யா கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 2013 ஆம் ஆண்டு மாண்டியா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். ஆனால் 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு 5500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் மாண்டியா தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments