தற்கொலை செய்ய முடிவெடுத்த தனுஷ் நாயகி.. ஆறுதல் கூறி காப்பாற்றிய ராகுல் காந்தி..!

  • IndiaGlitz, [Thursday,March 30 2023]

தனுஷ் நடித்த ’பொல்லாதவன்’ சிம்பு நடித்த ’குத்து’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரம்யா தனது தந்தை இறந்த சோகத்தில் தற்கொலை செய்ய முடிவு எடுத்ததாகவும் ஆனால் ராகுல் காந்தி தான் தனக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி காப்பாற்றியதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் கன்னட திரையுலகின் நடிகைகளில் ஒருவரான ரம்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது தந்தையார் மறைவு குறித்து அதில் இருந்து மீண்டு வந்தது குறித்து கூறியுள்ளார். தந்தை இறந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு நான் பாராளுமன்றத்தில் சென்றேன். பாராளுமன்ற நடவடிக்கைகள் எப்படி என்பது கூட எனக்கு தெரியாது. ஆனால் நான் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வேலையை கற்றுக் கொண்டேன்.

தந்தை இறந்த காலம் என்பது எனக்கு மிகவும் சோதனையான காலம். என் வாழ்க்கையில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது அம்மா, அடுத்தது என் தந்தை, மூன்றாவது ராகுல் காந்தி தான். நான் என் தந்தையை இழந்த போது துக்கத்தில் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்தேன். அந்த நேரத்தில் நான் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தேன். துக்கம் நிறைந்த அந்த நேரத்தில் ராகுல் காந்தி தான் எனக்கு உதவினார், உணர்ச்சி ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் எனக்கு ஆதரவளித்தார். அவருடைய ஆதரவால்தான் நான் மீண்டு வந்தேன் என்று கூறினார்.

நடிகர் ரம்யா கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 2013 ஆம் ஆண்டு மாண்டியா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். ஆனால் 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு 5500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் மாண்டியா தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

யாரிடமும் கெஞ்ச மாட்டேன்: சம்பள விவகாரம் குறித்து சமந்தா..!

ஹீரோவுக்கு சமமான சம்பளம் வேண்டும் என்று எந்த தயாரிப்பாளரிடம் நான் கெஞ்ச மாட்டேன் என நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அனுமதி மறுப்பு விவகாரம்.. வீடியோ வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர்.!

சென்னையில் உள்ள திரையரங்கில் இன்று சிம்பு நடித்த 'பத்து தல' என்ற திரைப்படம் வெளியான  நிலையில் இந்த படத்திற்கு டிக்கெட் வைத்திருந்த இரண்டு நரிக்குறவர் சமூக ரசிகர்களை தியேட்டர் நிர்வாகம் உள்ளே விட

'அகிலன்' உள்பட 4 தமிழ் படங்கள், மொத்தம் 14 படங்கள்.. இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது போலவே ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

நந்தினி எனக்கு ஒரு ஸ்பெஷல் கேரக்டர்: PS 2' இசை விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய்..!

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் நந்தினி கேரக்டரில் நடித்த நடிகை ஐஸ்வர்யாராய் பேசியதாவது:

மணிரத்னம் காலத்தில் நானும் இருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை: சியான் விக்ரம்

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் ஆதித்த கரிகாலம் கேரக்டரில் நடித்த நடிகர் சியான் விக்ரம் பேசியதாவது: