முதலிரவு புகைப்படங்களை பதிவு செய்த தனுஷ் பட நடிகை: நெட்டிசன்களின் ரியாக்சன்..!
- IndiaGlitz, [Saturday,March 04 2023]
தனுஷ் படத்தில் நடித்த நடிகை ஒருவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது முதல் இரவு அறையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருப்பதை அடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் நடித்த முதல் இந்தி திரைப்படம் ஆன ’ராஞ்சனா’ என்ற திரைப்படத்தில் நாயகிகளில் ஒருவராக நடித்தவர் ஸ்வரா பாஸ்கர். இவர் சமீபத்தில் பகத் அஹ்மது என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இவரது திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆனதில் வந்து தெரிந்ததே.
இந்த நிலையில் தனது முதல் இரவு அறையின் புகைப்படங்களையும் ஸ்வரா பாஸ்கர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் தனது முதலிரவு அறையை தனது தாயார் தான் அலங்காரம் செய்ததாகவும் அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றன.ர் பொது இடத்தில் முதலிரவு அறையை எல்லாம் பதிவு செய்வார்களா? என்றும் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் முதலிரவு அறை சூப்பராக அலங்கரிக்கப்பட்டதாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.