மோடி அரசை எதிர்த்து போராடியபோது மலர்ந்த காதல்.. தனுஷ் பட நடிகையின் திருமண புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Saturday,February 18 2023]

பிரதமர் மோடி அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய போது தனுஷ் பட நடிகைக்கு காதல் மலர்ந்த நிலையில் அந்த காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

தனுஷ் நடித்த முதல் பாலிவுட் திரைப்படமான ’ராஞ்சனா’ என்ற படத்தில் சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர் என்று இரண்டு நாயகிகள் நடித்திருந்தனர். இந்த நிலையில் ஸ்வரா பாஸ்கர் தற்போது தனது காதலர் பஹத் அகமது என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது

கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடந்த போது அந்த போராட்டத்தில் ஸ்வரா பாஸ்கர், பகத் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டதாகவும் அந்த அறிமுகம் பின்னர் காதலாக மாறி, தற்போது திருமணம் வரை சென்று உள்ளது என்றும் கூறப்படுகிறது.

தனது திருமணம் குறித்த புகைப்படங்களை நடிகை ஸ்வரா பாஸ்கர் வீடியோவாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.