close
Choose your channels

சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளை தொடங்கிய தனுஷ் பட நடிகை.. இப்படியும் ஒரு வழி இருக்கா?

Thursday, May 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் நடிகைகளின் பெயர்களில் தான் பல போலி கணக்குகள் தொடங்கப்படும் என்று கூறப்படும் நிலையில் தனுஷ் படத்தில் நடித்த நடிகை போலி கணக்குகள் தொடங்கியிருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவான ’அநேகன்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை அமைரா தஸ்தூர். 2015 ஆம் ஆண்டு இந்த படம் வெளியான நிலையில் இதையடுத்து அவர் பிரபுதேவா நடித்த ’பாகீரா’ என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார் என்பதும் சில பாலிவுட் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிரபலமாக அமைரா தஸ்தூர் இருக்கும் நிலையில் அவரது பதிவுகளை எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் சிலர் கேலியும் கிண்டலும் செய்து ட்ரோல் செய்து வருவதாக தெரிகிறது. இதனை அடுத்து இம்மாதிரியான நெட்டிசன்களை சமாளிக்க அவர் புத்திசாலித்தனமாக சில போலி கணக்குகளை தொடங்கி அந்த கணக்குகள் மூலம் அவர் அதிரடியாக பதிலடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது

தன்னுடைய கணக்கில் இருந்தே பதில் அளித்தால் பிரச்சனை ஆகும் என்பதற்காக அவர் போலி கணக்குகளை தொடங்கி நெகட்டிவ் ஆக விமர்சனம் செய்பவர்களுக்கும் ட்ரோல் செய்பவர்களுக்கும் பதிலடி கொடுத்து வருகிறாராம். கமெண்ட்கள் ஒரு கட்டத்தில் எல்லை மீறினால் நாமும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது என்றும் அமைரா தஸ்தூர் கூறியுள்ளார். இதை கேள்விப்பட்ட சிலர் பதிலடி கொடுக்க இப்படியும் ஒரு வழி இருக்கா? என ஆச்சரியப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment