சரத்குமார் மீது நடிகர் தனுஷின் தாய் வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

  • IndiaGlitz, [Thursday,June 06 2024]

நடிகர் தனுஷின் தாய் திடீரென சரத்குமார் மீது வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் நீதிமன்றம் இந்த வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

நடிகர் தனுஷின் தாய் தனது குடும்பத்துடன் சென்னை தியாகராஜ நகர் ராஜமன்னார் தெருவில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார். இந்த அப்பார்ட்மெண்டில் அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் பொதுவாக உள்ள மேல் தளத்தை சரத்குமார் ஆக்கிரமித்து அதை வணிகரீதியாக பயன்படுத்துவதாக குற்றம் காட்டப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை அடுத்து நடிகர் தனுஷின் தாய் உள்பட அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள சில குடியிருப்பு வாசிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

நடிகர் சரத்குமார் உள்ளிட்ட சிலர் மட்டும் குடியிருப்பின் மேல் பகுதியிலுள்ள பொதுவான பகுதிகளை மற்ற குடியிருப்புவாசிகள் பயன்படுத்துவதை தடுத்து வருவதாகவும் இதுகுறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாதாடினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை மாநகராட்சி மற்றும் நடத்த நடிகர் சரத்குமார் ஆகியோர் பதிலளிக்க உத்தரப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.