பாகிஸ்தானை பந்தாடிய போட்டியில் கிரிக்கெட் கடவுளை சந்தித்த தனுஷ்

  • IndiaGlitz, [Monday,June 05 2017]

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. பரம வைரியான பாகிஸ்தானுடன் இந்திய அணி 2015ஆம் ஆண்டிற்கு பின்னர் தற்போதுதான் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனவே இந்த போட்டியை நேரில் பார்க்க கோலிவுட் திரையுலகினர் பலர் சென்றிருந்தனர். அவர்களில் ஒருவர் தனுஷ்

இந்த போட்டியில் வழக்கம் போல பாகிஸ்தான் அணியை பிரித்து மேய்ந்து பந்தாடிய இந்திய அணி, 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நேரில் கண்டு ரசித்த சச்சின் தெண்டுல்கர் உள்பட பலரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் போட்டியின் நடுவே சச்சினை சந்தித்த தனுஷ் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த தனுஷ், இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடந்த மைதானத்தில் கிரிக்கெட் கடவுள் சச்சின் அவர்களை நேரில் சந்தித்தேன். சந்தோஷத்தில் என்னை கட்டுப்படுத்தவே முடியவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.

More News

இன்று முதல் சூப்பர் ஸ்டாருடன் இணைகிறார் விஷால்

கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உன்னிகிருஷ்ணன் இயக்கி வ&

லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல்: இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா?

இங்கிலாந்து நாட்டின் முக்கிய நகரமான மான்செஸ்டர் நகரில் சமீபத்தில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்தே இன்னும் அந்நாட்டு மக்கள் மீள முடியாத நிலையில் இன்று மீண்டும் லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்...

ரஜினியின் அரசியல் சாணக்கியத்தனம் தொடங்கிவிட்டதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மிக விரைவில் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

மீண்டும் இணைந்த 'என்னை அறிந்தால்' வெற்றிக் கூட்டணி

பிரபல இயக்குனர் கவுதம்மேனன் தற்போது தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் விக்ரம் நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் அவர் மேலும் ஒரு புதிய படத்தை இயக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

சிவாஜிக்கு குருவாக இருந்த பழம்பெரும் காமெடி நடிகர் காலமானார்.

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் சாமிக்கண்ணு காலமானார். அவருக்கு வயது 95...