தனுஷின் 'மாஸ்' அறிவிப்பு இதுவா? ஆச்சரியத்தில் கோலிவுட்

  • IndiaGlitz, [Sunday,November 06 2016]

கடந்த தீபாவளி தினத்தில் வெளியான 'கொடி' நல்ல ரிசல்ட்டை கொடுத்துள்ள நிலையில் தனுஷ் தற்போது 'எனை நோக்கி பாயும் தோட்டா', 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார். மேலும் அவர் ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கும் 'பவர்பாண்டி' படத்தை இயக்கியும் வருகிறார்.
அதுமட்டுமின்றி செளந்தர்யா ரஜினியின் அடுத்த படத்திலும் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் தனுஷ் விரைவில் ஒரு மாஸ் அறிவிப்பை அறிவிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியை பார்த்தோம்,.
இந்த மாஸ் அறிவிப்பை வரும் புதன்கிழமை தனுஷ் வெளியிடவுள்ளதாக அவருடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாஸ் அறிவிப்பு எதுவாக இருக்கும் என்று கோலிவுட் திரையுலகினர் ஊகித்து வரும் நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள படத்தை தனுஷ் தயாரிக்கும் அறிவிப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது. விஜய், தனுஷ், செல்வராகவன் கூட்டணி இணைந்தால் அதை விட ஒரு மாஸ் அறிவிப்பு வேறு இருக்காது என்றே கூறப்படுகிறது.

More News

சூப்பர் ஹிட் பட இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் 'பிரேமம்' கேரளாவில் மட்டுமின்றி...

த்ரிஷாவின் திருமணம் நின்றதற்கு இதுதான் காரணமா?

கடந்த தீபாவளி தினத்தில் தனுஷுடன் த்ரிஷா நடித்த 'கொடி' தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாகி நல்ல வசூலை தந்து கொண்டிருக்கின்றது.

'பைரவா' படத்தின் இன்னொரு பாடல் வரிகள் இதோ

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' படத்தின் 'பட்டையக் கெளப்பு, குட்டையக் குழப்பு' பாடல் வரிகளை சமீபத்தில் கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதை ஏற்கனவே பார்த்தோம்.

சூர்யா-விக்னேஷ் சிவன் படத்தில் இணைந்த பிரபலம்

பிரபல ஒளிப்பதிவாளர், நடிகர், இயக்குனர் சுரேஷ் மேனனை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

தினேஷின் 'உள்குத்து' சென்சார் தகவல்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த தினேஷ், அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது உள்குத்து, மெர்லின், அண்ணனுக்கு ஜே, வாராயோ வெண்ணிலவே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.