பவர்பாண்டி' படப்பிடிப்பு முடிவது எப்போது? தனுஷ் தகவல்

  • IndiaGlitz, [Thursday,February 16 2017]

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய தனுஷ் முதன்முதலில் இயக்கி வரும் திரைப்படம் 'பவர் பாண்டி'. ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை இயக்குவதோடு முக்கிய வேடத்திலும் தனுஷ் நடிக்கின்றார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே மீதியிருப்பதாக தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்தவுடன் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டு வரும் ஏப்ரலில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூ ராமன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைக்கின்றார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிரசன்னா எடிட்டிங் செய்கிறார்.

இந்த படத்தின் பணிகள் முடிந்தவுடன் தனுஷ், வெற்றிமாறனின் 'வடசென்னை' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஆளுனரை சந்திக்கின்றனர் பன்னீர்செல்வம்-பழனிச்சாமி அணிகள்

கடந்த சில நாட்களாக ஆட்சி அமைப்பது யார் என்ற பரபரப்பான நிகழ்வுகளுக்கு இன்று அல்லது நாளை முடிவு தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் போட்டியில் இருந்த சசிகலா சிறைக்கு சென்றுவிட்டதால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் ஆளுனரின் அழைப்புக்காக காத்திருந்தன...

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட 10,711.

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் சற்று முன் பெங்களூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் சரண் அடைந்தனர்

சுதாகரன் மனு நிராகரிப்பு. அரை மணி நேரத்தில் சரண் அடைய உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகியோர் சற்று முன்னர் சரண் அடைந்த நிலையில் சுதாகரன் மற்றும் உடல்நிலையை காரணம் காட்டி நாளை சரண் அடைவதாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

சரண் அடைந்தார் சசிகலா. இன்று முதல் 4 வருடங்களுக்கு ஜெயில் வாழ்க்கை

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, உச்சநீதிமன்ற உத்தரவின்படி சற்று முன்னர் பெங்களூர் பரப்பன அக்ராஹர நீதிமன்றத்தில் நீதிபதி முன்னர் சரண் அடைந்தார். அவருடன் இளவரசி மற்றும் சுதாகரனும் சரண் அடைந்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இன்று முதல் 4 வருடங்களுக்கு மூவரும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்...

கூவத்தூர் எம்.எல்.ஏக்களுக்கு விடுதலையா? உள்ளே நுழைந்தது அதிரடிப்படை

அதிமுக எம்.எல்.ஏக்கள் 100க்கும் மேற்பட்டவர்களை சசிகலா தரப்பு அணி கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் சசிகலா சரண் அடைய பெங்களூரை நோக்கி சென்றுவிட்டார். இந்நிலையில் அவர் சென்ற சிலமணி நேரங்களில் எம்.எல்.ஏக்களுக்கு விடுதலை கிடைக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது...