'மாரி 2' உருவாகுவது எப்போது?

  • IndiaGlitz, [Monday,February 01 2016]

தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர், விஜய்ஜேசுதாஸ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'மாரி' படம், சூப்பர் ஹிட் ஆகி நல்ல வசூலை கொடுத்தது. அனிருத்தின் இசையில் உருவான இந்த படம் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் தயாராகும் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தது.


இந்நிலையில் 'மாரி 2' திரைப்படம் வரும் அக்டோபர் முதல் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது தனுஷ் நடித்து வரும் 'கொடி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் 'மாரி 2' படத்திற்காக தனுஷ் அந்த படத்தின் டிரேட்மார்க் மீசை மற்றும் தாடியை வளர்க்கவுள்ளதாக கூறப்படுகிறது.. இரண்டாவது பாகத்தில் தனுஷின் கேரக்டருக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுககப்படும் என தெரிகிறது.

'மாரி 2' படத்தில் தனுஷுடன் காஜல் அகர்வால் மற்றும் ரோபோ சங்கர் நடிக்கவுள்ளதாகவும் மற்ற நடிகர், நடிகைகளை இயக்குனர் பாலாஜி மோகன் தேர்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் 'கொடி' படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகிய போதிலும் 'மாரி 2' படத்திற்கு அவர்தான் இசையமைப்பார் என கூறப்படுகிறது.

More News

தெறி'யில் விஜய்யின் பணி முடிந்தது

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது...

தெறி: விஜய் மகளுக்கு பின்னணி கொடுத்த தேசிய விருது பெற்ற பாடகி

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் படக்குழுவினர்களால் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்...

ஜீவாவின் 'போக்கிரி ராஜா' டீசர் ரிலீஸ் தேதி

கோலிவுட் திரையுலகில் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜீவா நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான 'யான்' திரைப்படம் தோல்வி அடைந்த நிலையில்...

விஜய் 60' படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற பாடலாசிரியர்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...

'தெறி' டீசரில் உள்ள காட்சிகள். ரகசியத்தை உடைத்த ஜி.வி.பிரகாஷ்

இளையதளபதி விஜய் நடிப்பில் 'ராஜா ராணி' இயக்குனர் அட்லி இயக்கியுள்ள 'தெறி' படத்தின் டீசர் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது...