தனுஷின் 'விஐபி 2'வை அடுத்து மேலும் ஒரு 2ஆம் பாக படம்

  • IndiaGlitz, [Sunday,December 18 2016]

தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் படமான 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என்பதும் இந்த படத்தை ரஜினியின் இளையமகள் செளந்தர்யா இயக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் தனுஷின் இன்னொரு ஹிட் படமான 'மாரி' படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடித்த 'மாரி' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் தொடங்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது 'மாரி 2' உறுதியாகியுள்ளது. இந்த படத்திற்கான திரைக்கதையை எழுத தொடங்கிவிட்டதாக இயக்குனர் பாலாஜி மோகன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். எனவே மிக விரைவில் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.