close
Choose your channels

விஷால் விஷ்ணுவை 'கதாநாயகன்' ஆக்கிய தனுஷ்

Monday, May 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளளயதலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷால் விஷ்ணு. அவரது 'வேலைன்னு வந்துட்டா' வெள்ளைக்காரன் படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகர்களின் பட்டியலுக்கு வெகு அருகில் கொண்டு சென்று நிறுத்தியது.

இந்த நிலையில் தற்போது 'கதாநாயகன், பொன் ஒன்று கண்டேன், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம், மின்மினி ஆகிய படங்களில் விஷ்ணு நடித்து வருகிறார். இதில் 'கதாநாயகன்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று மாலை வெளியானது. இந்த ஃபர்ஸ்ட்லுக்கை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விஷ்ணு, கேதரின் தெரசா, சூரி, உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார். விஷணுவின் 'விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சீன்ரோல்டன் இசையமைக்கின்றார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்குகிறார்.

விஷ்ணுவின் 'கதாநாயகன்' ஃபர்ஸ்ட்லுக்கிற்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக இயக்குனர் சுசீந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் விஷ்ணுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment