பிப்ரவரியில் முடிகிறது தனுஷின் அடுத்த படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த 'தங்கமகன்' திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானதை அடுத்து அவர் நடித்து வரும் இன்னொரு படமான 'கொடி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதன்முதலாக அண்ணன் - தம்பி என இருவேடங்களில் தனுஷ் நடித்து வரும் இந்த படத்தில் த்ரிஷா மற்றும் ஷாலினி அஜித்தின் சகோதரி ஷாமிலியும் நடித்து வருகின்றனர்.
தனுஷ் முதன்முதலாக அரசியல்வாதி கேரக்டரில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாத இறுதியில் முடிவடையும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படமும் அடுத்த மாதம் முடிவடைவதால் அடுத்தடுத்த ஒரு சிறு இடைவெளியில் இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ், த்ரிஷா, ஷாமிலி, சதீஷ், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். 'எதிர்நீச்சல்' மற்றும் 'காக்கி சட்டை' ஆகிய படங்களை இயக்கிய துரைசெந்தில்குமார் இயக்கி வரும் இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவும் ப்ரவீண் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments