close
Choose your channels

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு தனுஷ் தரும் பரிசு.

Friday, July 1, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'தொடரி' திரைப்படம் கிட்டத்தட்ட ரிலீஸ் தேதியை அறிவிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. இந்நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள மற்றொரு படமான 'கொடி' என்ற அரசியல் படமும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
'எதிர்நீச்சல்' மற்றும் 'காக்கிச்சட்டை' படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தனுஷின் பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு அவர் தரும் பிறந்த நாள் பரிசாகவே இந்த ஃபர்ஸ்ட்லுக் கருதப்படுகிறது.
முதல்முறையாக இரண்டு வித்தியாசமான வேடங்களில் தனுஷ் நடித்து வரும் 'கொடி' படத்தில் த்ரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment