'கொடி', 'காஷ்மோரா' சென்னை ஓப்பனிங் வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,October 31 2016]

கடந்த தீபாவளியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கார்த்தியின் 'காஷ்மோரா' மற்றும் தனுஷின் 'கொடி' ஆகிய படங்கள் ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக தமிழகம் முழுவதும் திருப்திகரமான வசூலை கொடுத்து வரும் நிலையில் இந்த படங்களின் சென்னை வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.
சென்னையில் தனுஷின் 'கொடி' திரைப்படம் 23 திரையரங்க வளாகங்களில் 350 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,44,15,880 வசூலாகியுள்ளது. திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் நிரம்பியிருந்ததால் இந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் வசூல் கிடைத்துள்ளதுஜ்.
இதேபோல் கார்த்தியின் 'காஷ்மோரா' திரைப்படம் சென்னையில் 17 திரையரங்கு வளாகங்களில் திரையிடப்பட்டு அதிகாலை காட்சிகள் உள்பட 302 காட்சிகள் ஓடியுள்ளது. முதல் நாளில் 1,18,56,420 ரூபாய் இந்த படம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரையரங்குகள் 95% நிரம்பியிருந்தது என்றும் கார்த்தியின் படங்களில் இந்த படம் நல்ல ஓப்பனிங் வசூலை கொடுத்துள்ளது என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

பிரதமர் மோடியுடன் நடிகை கவுதமி திடீர் சந்திப்பு

பிரபல நடிகையும் கமல்ஹாசனின் துணைவியுமான கவுதமி புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தது மட்டுமின்றி புற்று நோய் விழிப்புணர்வுக்காக பல அரிய சேவைகள் செய்து வருகிறார்.

காவல்துறை உயரதிகாரிகளுடன் தீபாவளி கொண்டாடிய பிரபல நடிகர்

தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராக நடிகர் விஷால் பதவியேற்றதில் இருந்து நலிந்த நடிகர்களுக்கு மட்டுமின்றி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் அவ்வப்போது தனது தேவி அறக்கட்டளை மூலம், தனது சொந்த பணத்தில் இருந்தும் உதவி செய்து வருகிறார்.

'அச்சம் என்பது மடமையடா' ரிலீஸ் தேதி.

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

22 மணி நேரத்தில் 22 லட்சம். 'பைரவா' செய்த சாதனை

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் டீசர் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த டீசர் வெறும் 22 மணி நேரத்தில் 22 லட்சம் பார்வையாளர்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளது.

'பைரவா' படத்தில் விஜய் பாடிய பாடல். பரதன் வெளியிட்டுள்ள தகவல்

இளையதளபதி விஜய் கடந்த சில வருடங்களாக அவர் நடித்து வரும் படங்களில் ஒரு பாடலை பாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.