தனுஷ்-கீர்த்திசுரேஷ் படத்தின் டைட்டில்-பர்ஸ்ட்லுக் எப்போது?

  • IndiaGlitz, [Thursday,March 17 2016]
'தங்கமகன்' படத்தை அடுத்து தனுஷ் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான டைட்டில் வைக்கப்படாத படம் மற்றும் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் உருவான 'கொடி' ஆகிய இரண்டு படங்களையும் முடித்துவிட்டு தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் மார்ச் இறுதியில் வெளீயாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தனுஷ் இந்த படத்தில் ரயில்வே ஃபேண்ட்ரி ஊழியராகவும், கீர்த்தி மலையாள பெண்ணாகவும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ரயிலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் ஒரு விறுவிறுப்பான ஆக்சன் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை வரும் மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.