தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படம் என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Tuesday,May 09 2017]

பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி' போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளிவந்தன. சமீபத்தில் கூட தனுஷ், இந்த படம் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கும் என்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பிரபுதேவாவிடம் ஒரு கதையை கூறியுள்ளதாகவும், அந்த கதையால் இம்ப்ரஸ் ஆன பிரபுதேவா அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இதுகுறித்த ஒப்பந்தம் மிக விரைவில் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் குறுகிய காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தின் நாயகியாக கன்னட நடிகை சம்யுக்தா ஹெட்ஜ் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருந்த கதையும், பிரபுதேவா நடிக்கவுள்ள கதையும் ஒன்றா? அல்லது வெவ்வேறா?, தனுஷ் -கார்த்திக் சுப்புராஜ் படம் என்ன ஆச்சு போன்ற கேள்விகளுக்கு விரைவில் விடை தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'பாகுபலி' பாணியில் சுந்தர் சி-யின் 'சங்கமித்ரா

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் சரித்திர சாதனை திரைப்படங்களான 'பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' திரைப்படங்கள் ரூ.1500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மரத்தை சுற்றி டூயட் பாடும் வயதில் நான் இல்லை. ரம்யாகிருஷ்ணன்

தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து புகழ் பெற்ற நடிகை ரம்யாகிருஷ்ணன், 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களில் ராஜமாதா சிவகாமி கேரக்டராக வாழ்ந்தார். இந்த படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றார் ரம்யா கிருஷ்ணன் என்றால் அது மிகையில்லை...

'சகலகலாவல்லவர்' டி.ராஜேந்தருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, தயாரிப்பு, இயக்கம் என அனைத்து துறைகளிலும் ஆரம்பம் முதலே ஈடுபட்டு வரும் சகலகலாவல்லவர் டி.ராஜேந்தர் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை. சுப்ரீம் கோர்ட் அதிரடி

கடந்த சில மாதங்களாக முன்னாள் சென்னை ஐகோர்ட் நீதிபதியும், இந்நாள் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியுமான கர்ணன் அவர்களுக்கும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வருகிறது...

உழைப்பாளிகளுக்கு பெருமை சேர்த்த தமிழ் சினிமா

இன்று மே-1, உழைப்பாளர்கள் தினம். வருடம் முழுவதும் உழைக்கும் உழைப்பாளர்களை பெருமைப்படுத்த அவர்களுக்கு என்று ஒரு நாள் கொண்டாடப்படும் தினம்.