தனுஷின் 'விஐபி 2' ரிலீஸ் தேதி?

  • IndiaGlitz, [Wednesday,March 22 2017]

தனுஷ் இயக்கிய முதல் படமான 'பவர்பாண்டி' படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளது என்பதும், இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ளது என்பதும் ஏற்கனவே அறிந்ததே

இந்த நிலையில் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த 'விஐபி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. 'விஐபி 2' திரைப்படம் வரும் ஜூலை 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டீசர் மே இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

More News

இளம் இசைப்புயல் ஸ்டுடியோவுக்கு திடீர் விசிட் அடித்த சூப்பர் ஸ்டார்

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான ஒருசில வருடங்களில் அஜித், விஜய் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர் அனிருத்.

பிரபல திமுக எம்.எல்.ஏவுடன் நடிகர் விஷால் திடீர் சந்திப்பு

நடிகர் சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான விஷால் அடுத்த மாதம் நடைபெறும் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

தனுஷின் 'பவர்பாண்டி' டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்

கோலிவுட் திரையுலகில் ஏற்கனவே பல்வேறு திறமைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கும் தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் இயக்கிய முதல் படம் 'பவர்பாண்டி'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது...

சி.ஆர்.சரஸ்வதி, வளர்மதி ஆகியோர் அரசியல் வியாதிகள். நிர்மலா பெரியசாமி ஆவேச பேட்டி

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டத்தில் நிர்மலா பெரியசாமி மற்றும் வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி இடையே ஏற்பட்ட சர்ச்சைகள் குறித்து சில மணி நேரங்களுக்கு முன் பார்த்தோம். சசிகலா அதிமுக அணியில் இருந்து கொண்டு ஓபிஎஸ் குறித்து புகழ்ந்து பேசி சேம் சைடு கோல்போட்ட நிர்மலாவுக்கும் சசிகலா அணியின் அதிமுக தரப்புக்கும் காரசாரமாக நடந்த வி

இளையராஜா-எஸ்பிபி பிரச்சனை எங்களை யோசிக்க வைத்துவிட்டது. ஞானவேல்ராஜா

இசைஞானி இளையராஜா மற்றும் பாடகர் எஸ்பிபி ஆகிய இருவருக்கும் இடையே எழுந்துள்ள காப்புரிமை பிரச்சனை பல துறையினர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டது என்றே கூற வேண்டும். இசைத்துறையில் இருந்து மட்டுமின்றி பல்வேறு துறையினர்களும் ஏன் நாமும் காப்புரிமை கேட்கக்கூடாது என்று யோசிக்க தொடங்கிவிட்டனர்...