'என்னடா நடக்குது': அனுஷ்கா ஷெட்டியுடன் இணைந்த தனுஷ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் தனுஷ், அனுஷ்கா ஷெட்டியின் அடுத்த திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி என்பதும் தற்போது அவர் ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரொமான்ஸ் மற்றும் காமெடி திரைக்கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி சமையல் கலை வல்லுனராக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ராதான் இசையில் மகேஷ்பாபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த பாடல் மே 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ’என்னடா நடக்குது’ என்று தொடங்கும் இந்த பாடல் தனுஷ் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Boys! He Sing Song… Here’s our next Song Singer Announcement… 😉 #YennadaaNadakkudhu Lyrical video from #MissShettyMrPolishetty Releasing on May 31st 🎶@UV_Creations @StudioGreen2 @dhanushkraja @MsAnushkaShetty @NaveenPolishety @filmymahesh @radhanmusic #NiravShah… pic.twitter.com/lcJawYuCCG
— Studio Green (@StudioGreen2) May 27, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com