வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தில் திடீரென இணைந்த தனுஷ்: என்ன செய்திருக்கார் பாருங்க!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்துவரும் ‘விடுதலை’ திரைப்படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி மற்றும் ராஜீவ் மேனன் இணைந்த நிலையில் தற்போது தனுஷ் இணைந்துள்ள செய்தி ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகிவரும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்பதும் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தில் சமீபத்தில் இயக்குனர் ராஜீவ் மேனன் இணைந்த தகவல் வெளியானதையடுத்து தற்போது தனுஷூம் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்த படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்ட ஒரு பாடலை தனுஷ் பாடி உள்ளதாகவும், இளையராஜாவின் இசையில் தனுஷ் பாடியது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.