close
Choose your channels

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் அடுத்த படத்தில் இணைகிறாரா தனுஷ்..? என்ன செய்யப் போகிறார் தெரியுமா?

Monday, May 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடித்து வரும் திரைப்படம் ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது தனுஷ் இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு அனுஷ்கா ஷெட்டி நடித்த ’சைலன்ஸ்’ என்ற திரைப்படத்திற்கு பின்னர் தற்போது அவர் ’மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் ’பொலிஷெட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் சமையல் கலை வல்லுநராக நடித்து வரும் நிலையில் ரொமான்ஸ் மற்றும் காமெடி திரைக்கதை அம்சம் கொண்டது இந்த படம் என்று கூறப்படுகிறது.

ராதான் இசையில் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலை தனுஷ் பாட இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தனுஷ் தான் இந்த பாடலை பாட இருப்பதாகவும் இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆர்யாவுடன் அனுஷ்கா நடித்த ’இரண்டாம் உலகம்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment