3வது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் தனுஷ்.. லுக் டெஸ்ட் முடிந்தது..!

  • IndiaGlitz, [Thursday,June 01 2023]

தனுஷ் நடித்த இரண்டு பாலிவுட் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ராய் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தில் தனுஷ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ’ராஜன்னா’ என்ற பாலிவுட் திரைப்படத்தை ஆனந்த் எல் ராய் இயக்க அந்த படத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் அக்ஷய்குமார் நடித்திருந்த ‘அட்ராங்கி ரே’ என்ற படமும் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிட்டுள்ளது.


இந்த நிலையில் மீண்டும் தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய் இணையும் திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டெஸ்ட் லுக் மற்றும் புரமோ படப்பிடிப்பு நேற்று மும்பையில் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளன. இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த தனுஷ் - ஆனந்த் எல் ராய் கூட்டணி மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.