தனுஷ் ஒரு ரோபோ போன்றவர்: 'ஜகமே தந்திரம்' நடிகை புகழாராம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில் திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி கொடுத்த உடன் இந்த படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ’ரகிட ரகிட’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’ஜகமே தந்திரம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நடிகை சஞ்சனா நடராஜன் தனுசுடன் நடித்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
தனுஷ் போன்ற மிகப் பெரிய நடிகருடன் முதன்முதலாக இணைந்து நடிக்கும் போது தனக்கு பதட்டமாக இருந்ததாகவும் ஆனால் அவர் தனது பதட்டத்தை போக்கி தனது நம்பிக்கை அளித்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் தனுஷின் முதல் நாள் படப்பிடிப்பை நாள் முழுவதும் உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்ததாகவும் முதல் டேக்’ஆக இருந்தாலும் மூன்றாவது டேக்’ ஆக இருந்தாலும் அவருடைய எனர்ஜி கொஞ்சம் கூட குறையாமல் இருப்பதை பார்த்து தான் ஆச்சரியப்பட்டதாகவும் கூறினார்
மேலும் தனுஷ் ’எந்திரன்’ படத்தில் வரும் ‘சிட்டி ரோபோட்’ போன்றவர் என்றும் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக அவர் உள்வாங்கிக்கொண்டு நடிப்பதில் வல்லவர் என்பதை தான் புரிந்து கொண்டதாகவும் அவருடன் முதன்முதலாக நடித்ததில் மிகுந்த சந்தோஷம் என்றும் இந்த வாய்ப்பை தனக்கு அளித்த கார்த்திக் சுப்பராஜ் அவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments