'ராயன்' படத்தின் அடுத்த நட்சத்திரம் அறிமுகம்.. தனுஷுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Saturday,February 24 2024]

தனுஷின் 50வது திரைப்படமான ’ராயன்’ என்ற படத்தை அவரே இயக்கி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கியதாக செய்திகள் வெளியானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’ராயன்’ படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தனுஷ் அதன் பிறகு இந்த படத்தில் நடித்து வரும் நட்சத்திரங்களின் போஸ்டரை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக அவர் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் ஆகியோர்களின் போஸ்டர்களை வெளியிட்ட நிலையில் மூன்று போஸ்டர்களும் வித்தியாசமாக இருந்ததை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

இந்த நிலையில் சற்று முன் தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் ’ராயன்’ படத்தின் நாயகியான துஷாரா விஜயன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். கருப்பு வெள்ளையில் இருக்கும் இந்த நான்கு போஸ்டர்களும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து உள்ள நிலையில் மிகச்சிறந்த நட்சத்திரங்களை தேர்வு செய்ததிலிருந்து தனுஷ் ஒரு இயக்குனராக வெற்றி பெற்றுவிட்டார் என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

என் அடுத்த பட ஹீரோவுக்கு கை உடைந்ததால் மகனை ஹீரோவாக்கினேன்: இயக்குனர் முத்தையா

பிரபல இயக்குனர் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா ஹீரோவாக நடிக்க இருக்கும் திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை பார்த்தோம்.

வெங்கடேஷ் பட்-ஐ தொடர்ந்து இன்னொரு பிரபலமும் விலகல்.. என்ன நடக்குது குக் வித் கோமாளியில்?

விஜய் டிவியில் கடந்த நான்கு சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க இருப்பதாகவும் இந்த சீசனுக்கான

4 லொகேஷன் ரெடி.. 'சூர்யா 43' படப்பிடிப்பு எப்போது? கசிந்த தகவல்..!

நடிகர் சூர்யா நடிப்பில், சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நான்கு இடங்களில் நடைபெற இருப்பதாகவும்

த்ரிஷா விவகாரத்தில் 2வது முறையாக புகார் அளித்த கருணாஸ்.. இந்த முறை யார் மீது?

நடிகர் கருணாஸ் ஏற்கனவே தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜூ மீது காவல்துறையில் புகார் அளித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புகார் அளித்துள்ளதாக தகவல்

திருமணம் செய்ய மறுத்த டிவி ஆங்கரை கடத்திய பெண் தொழிலதிபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

தொலைக்காட்சியில் பணிபுரியும் ஆங்கரை பெண் தொழிலதிபர் ஒருவர் திருமணம் செய்வதற்காக கடத்தியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.