துஷாரா விஜயனை அடுத்து இன்னொரு நாயகி.. 'ராயன்' நடிகையை அறிமுகம் செய்த தனுஷ்..!

  • IndiaGlitz, [Sunday,February 25 2024]

தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் நடித்த கேரக்டர்களின் போஸ்டர்களை கடந்த சில நாட்களாக தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இந்த படத்தில் நடித்த எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர்களின் போஸ்டர்களை தனுஷ் வெளியிட்டு இருந்தார் என்பதும் அனைத்தும் கருப்பு வெள்ளையில் கலக்கலான போஸ்டராக இருந்ததை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடித்த இன்னொரு நாயகியான அபர்ணா பாலமுரளியின் போஸ்டரை தனுஷ் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். மற்ற போஸ்டர்களை போலவே இந்த போஸ்டரும் பிளாக் அண்ட் ஒயிட்டில் அசத்தலாக உள்ளது என்பதும் இந்த போஸ்டர்கள் படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷின் 50வது படமான ‘ராயன்’ படத்தை அவரே இயக்கி நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பா ரஞ்சித் படத்தை பார்த்து பாராட்டு தெரிவித்த 'கோட்' நடிகர்.. மார்ச் 8ல் ரிலீஸ்..!

விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தில் நடித்து வரும் நடிகர், பா. ரஞ்சித் தயாரித்த  படத்தை பார்த்து அவருக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 

ஷங்கர் பட ஹீரோவின் அடுத்த படம்.. ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து இணைந்த ரத்னவேலு..!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், ராம்சரண் தேஜா நடித்து வரும் 'கேம் சேஞ்சர்' என்ற படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் இருக்கும் நிலையில் அவருடைய

மேக்கப்புக்கு முன்..  மேக்கப்புக்கு   பின்.. நயன்தாரா வெளியிட்ட வீடியோ வைரல்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மேக்கப்புக்கு முன் மற்றும்  மேக்கப்புக்கு   பின் என வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

திடீரென டிரெண்ட் ஆகும் கமல்ஹாசனின் 'குணா'.. எல்லாம் மலையாள பாய்ஸ் மகிமை..!

கமல்ஹாசன் நடிப்பில் சந்தான பாரதி இயக்கத்தில் உருவான 'குணா' திரைப்படம் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 33 ஆண்டுகள் கழித்து திடீரென இந்த படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி

காயத்தில் இருந்து மீண்டு வந்த நடிகை.. அதே ஆக்ரோஷத்துடன் ஸ்டண்ட் காட்சி.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

நடிகை சம்யுக்தா கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு படத்தின் ஸ்டண்ட் காட்சியில் நடித்து கொண்டிருந்த நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பில் காயம் அடைந்தார். அதன்பின்னர் குணமடைந்து மீண்டும்