தனுஷின் 'வாத்தி' படத்தின் முக்கிய அப்டேட்: ரசிகர்கள் குஷி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ‘வாத்தி’ என்றும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் சற்று முன் வெளியாகி உள்ளது. தனுஷ் நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு படமான ‘வாத்தி’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது என்ற தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தனுஷ் நடித்து முடித்துள்ள ’மாறன்’ மற்றும் ’தி க்ரே மேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் தனுஷ் நடித்து வரும் ’திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ’நானே வருவேன்’ என்ற படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments