'வடசென்னை' ரிலீஸ் குறித்து தனுஷின் முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,June 15 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தை தயாரித்து சமீபத்தில் வெளியிட்ட அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், கடந்த சில நாட்களாக அந்த படத்தின் புரமோஷன் பணிகளில் மூழ்கியிருந்தார். இந்த நிலையில் தன்னுடைய படம் ஒன்றின் முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

தனுஷ், நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வடசென்னை' திரைப்படத்தின் முதல் பாக படப்பிடிப்பு முடிவடைந்து அந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து டிரைலர் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர்களும் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் வரும் செப்டம்பரில் வெளியாகும் என்றும் தனுஷ் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றான 'வடசென்னை' திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாகத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஜிபி வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த முக்கிய அமைச்சர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ரஞ்சித் படத்தின் அடுத்த ஹீரோ யார்?

'அட்டக்கத்தி' , 'மெட்ராஸ்' ஆகிய இரண்டே படங்கள் இயக்கிய இயக்குனர் ரஞ்சித்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தொடர்ச்சியாக 'கபாலி' மற்றும் 'காலா' என இரண்டு படங்கள் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பிரபல நடிகருக்கு ஆண் குழந்தை: கமல்ஹாசன் வாழ்த்து

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் அவர்களுக்கு இன்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ஜூனியர் என்.டி.ஆர் தனது சமூக வலைத்தளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

கமல்ஹாசனுக்கு நன்றி கூறிய முதலமைச்சர்: ஏன் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும் நல்ல நட்பு உண்டு என்பதும், கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கிய தினத்தன்று

3013ஆம் ஆண்டுக்கு டிக்கெட் கொடுத்த ரயில்வே துறைக்கு அபராதம்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு ரயில் பயணிக்கு 3013ஆம் ஆண்டுக்கான டிக்கெட்டை ரயில்வே நிர்வாகம் தவறாக கொடுத்திருந்தது. அந்த பயணியிடம் சரியான டிக்கெட் இல்லை