தனுஷின் 'வடசென்னை' ரன்னிங் டைம் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,October 13 2018]

தனுஷின் கனவுப்படங்களில் ஒன்றான 'வடசென்னை' திரைப்படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் கொடுத்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் 166 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 46 நிமிடங்கள் ஓடும் வகையில் ரன்னிங் டைம் உள்ளது. கொஞ்சம் நீளம் அதிகமாக இருந்தாலும் விறுவிறுப்பாக இருக்கும் பட்சத்தில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், உள்பட பலர் நடித்துள்ள 'வடசென்னை' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஜிபி வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

விஜய், ரஜினிக்கு நடுவில் புகுந்த விஜய்சேதுபதி

நவம்பர் 6க்கும், நவம்பர் 29க்கும் இடையில் நவம்பர் 16ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்த 'சீதக்காதி' திரைப்படம் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

'சர்கார்' படத்தில் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்: டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர்

விஜய் நடிக்கும் 'சர்கார்' படத்தின் ஒரு பாடலில் சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக இந்த படத்தின் பாடல் ஒன்றுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ள ஸ்ரீதர் மாஸ்டர் கூறியுள்ளார்.

'ஜீனியஸ்' சென்சார் தகவல் மற்றும் ஆச்சரியமான ரன்னிங் டைம்

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயகக்த்தில் உருவாகியுள்ள 'ஜீனியஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

சர்வதேச கவனத்தை பெறும் 'ராட்சசன்'

விஷ்ணு, அமலாபால் நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கிய 'ராட்சசன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் ரஜினி-த்ரிஷா புகைப்படங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் வைரலானது.