தனுஷின் 'வடசென்னை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,August 22 2018]

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது தெரிந்ததே. மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருந்த இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து இரவுபகலாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் அறிவித்துள்ளார்.

'வடசென்னை' திரைப்படம் அக்டோபர் 17ஆம் தேதி அதாவது ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ளது. நீண்ட விடுமுறை தினத்தில் இந்த படம் வெளியாவதால் நல்ல ஓப்பனிங் வசூல் இந்த படத்திற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை சற்றுமுன் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், உள்பட பலர் நடித்துள்ள 'வடசென்னை' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஜிபி வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

மூன்றாவது முறையாக மோதும் சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி

செப்டம்பர் 13ஆம் தேதி சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய்சேதுபதி நடித்த '96' திரைப்படமும் அதே நாளில் வெளியாகும் என தெரிகிறது

காமிக் புத்தக வடிவில் வெளியான சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் திரைப்படம்

சிவகார்த்திகேயன் சூப்பர் ஹிட் வெற்றி என்பது 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் இருந்து தொடங்கியது என்று கூறினால் அது மிகையில்லை.

மகத் நடிக்கும் அடுத்த படத்தில் சிம்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பலர் நிஜவாழ்க்கையில் சினிமா மற்றும் தொலைக்காட்சி வாய்ப்புகள் பெற்று பிசியாக உள்ளனர்.

கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதி கொடுத்த பாலியல் தொழிலாளர்கள்

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த வரலாறு காணாத கனமழையால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

இனியும் நான் மகத்தின் காதலி கிடையாது: பிராய்ச்சி மிஸ்ரா அதிரடி அறிவிப்பு

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மகத், தான் யாஷிகாவை காதலிப்பதாகவும், வெளியே ஒரு பெண் தனக்காக காத்திருக்கின்றார் என்று தெரிந்தும்