தனுஷின் வடசென்னை ரிலீஸ் தேதியில் மாற்றமா?

  • IndiaGlitz, [Saturday,September 15 2018]

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தகவலை தனுஷூம் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார். இந்த நிலையில் சற்றுமுன் வொண்டர்பார் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் தேதி குறிப்பிடாமல் அக்டோபர் வெளீயீடு என்று இந்த படத்தின் விளம்பரம் வெளிவந்துள்ளது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இன்றைய விளம்பரத்தில் 'விரைவில் இசை வெளியீடு' என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் இசை வெளீயீட்டு தேதி குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கிஷோர், உள்பட பலர் நடித்துள்ள 'வடசென்னை' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், ஜிபி வெங்கடேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.