'வடசென்னை' அரசியல் பேசும் படமா? வெளிவராத புதிய தகவல்கள்

  • IndiaGlitz, [Wednesday,March 07 2018]

தமிழ் திரையுலகில் பல அரசியல் திரைப்படங்கள் வெளிவந்துவிட்டாலும் இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து ஒருசில படங்கள் தயாராகி வருகிறது. அந்த வகையில் ரஜினியின் அடுத்த படம், கமலின் அடுத்த படம் உள்பட பல திரைப்படம் இன்றைய அரசியலை நோக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனுஷின் 'வடசென்னை' திரைப்படத்திலும் இன்றைய அரசியல் கலந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆம், ஒரு அரசியல் தலைவரின் மரணதால் ஒரு கட்சி இரண்டாக உடைந்து அதன் பின்னர் என்ன நடக்கும் என்பது குறித்த காட்சிகள் இந்த படத்தில் உள்ளதாம்.

மேலும் இந்த படத்தில் நான்கு பாடல்களும், அதில் ஒன்று கானா பாடல் என்றும் கூறப்படுகிறது. இசை சந்தோஷ் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தனுஷ் கேரம்போர்டு  விளையாட்டு வீரராக நடித்திருப்பதாகவும், உலக சாம்பியன் ஆகவேண்டும் என்பதே அவரது குறிக்கோள் என்றும், அது நிறைவேறியதா? என்பதுதான் மெயின் கதை

இந்த படத்தில் தனுஷ் 'அன்பு' என்ற கேரக்டரிலும், ஐஸ்வர்யா ராஜேஷ் 'பத்மா' என்ற கேரக்டரிலும், இயக்குனர் அமீர் 'ராஜன்' என்ற கேரக்டரிலும், சமுத்திரக்கனி 'குணா' என்ற கேரக்டரிலும், ஆண்ட்ரியா 'சந்திரா' என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ஹீரோ, வில்லன் என யாரும் இல்லை. படத்தில் நடித்துள்ள முக்கிய கேரக்டர்கள் அனைவருக்கும் கதையில் முக்கியத்துவம் உண்டு

இந்த படத்தின் மூலக்கதையை 80 பக்க நோட்டில் எழுதி இயக்குனர் வெற்றிமாறனிடம் கொடுத்துள்ளார் ஒரு எழுத்தாளர். அவர் யார் என்பதை விரைவில் வெற்றிமாறன் அறிவிக்கவுள்ளார்.

இந்த படத்தின் கதை 35 வருட வாழ்க்கை என்பதால் இரண்டுக்கும் மேற்பட்ட பாகங்களாக உருவாக்கவிருப்பதாகவும், எத்தனை பாகங்கள் என்பதையும் முதல் பாகத்தின் வெளியீடு எப்போது என்பதையும் வெற்றிமாறன் வெகுவிரைவில் அறிவிக்கவுள்ளார்.