தரமான கல்வி வேணும்ன்னா காசு கொடுக்கணும்: 'வாத்தி' டிரைலர்
- IndiaGlitz, [Wednesday,February 08 2023]
தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் வரும் 18 ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நம் நாட்டைப் பொருத்தவரை கல்வி ஒரு வருமானம் இல்லாத சேவை, தனியார் பள்ளிகள் சார்பாக நம் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்தையும் நாம் எடுத்து நடத்த போகிறோம் என்ற வசனத்துடன் டிரைலர் தொடங்குவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து தனுஷ் சம்யுக்தா ஆகியோரிடையே ரொமான்ஸ் காட்சிகள் இருக்கும் ட்ரைலரில் அதன்பின் மீண்டும் சீரியசான காட்சிகள் தொடங்குகின்றன. தரமான கல்வி வேணும்னா காசு கொடுக்கணும், படிக்கணும் என்ற ஆசை எவனுக்கு வந்தாலும் பணம் தரணும்’ என்ற வசனம் படத்தின் கதையை ஓரளவு யூகிக்க வைக்கின்றது.
அரசு பள்ளியை நடத்த ஒப்புக்கொள்ளும் தனியார் பள்ளி நிர்வாகிகள், ஒரு சில நாட்களில் பணம் கட்டாத மாணவர்களை விரட்டி விட மீண்டும் ஏழை மாணவர்களை படிக்க வைக்க தனுஷ் செய்யும் முயற்சிதான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.
ஒரு குழந்தை ஆசைப்பட்டதை பெற்றோர் வாங்கி கொடுக்கவில்லை என்றால் அந்த குழந்தை ஐந்து நிமிடம் மட்டும் தான் அழுகும், ஆனால் பெற்றோர் காலம் முழுவதும் அழுவார்கள் என்ற வசனம், கல்வியில் கிடைக்கிற காசு அரசியலில் கிடைக்காது, பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், ஆனால் படிப்பு தான் மரியாதையை சம்பாதித்து கொடுக்கும் ஆகிய வசனங்கள் இந்த ட்ரைலரின் ஹைலைட்ஸ் ஆகும். இந்த டிரைலரை பார்க்கும்போது நிச்சயம் இந்த படம் தனுஷின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ், சம்யுக்தா ஹெக்டே, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.