தனுஷின் 'வாத்தி' செம அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.. காத்திருக்கும் ரசிகர்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்து முடித்துள்ள ‘வாத்தி’ திரைப்படத்தின் செம அப்டேட்டை பட குழுவினர் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியான நிலையில் ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி சற்று முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வாத்தி’ படத்தை தயாரித்து வரும் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் சற்றுமுன் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘வாத்தி’ ட்ரைலர் பிப்ரவரி 8ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளது. இதனை அடுத்து இன்னும் இரண்டு நாட்கள் ரசிகர்கள் இந்த ட்ரெய்லருக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ், சம்யுக்தா, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படம் தனுஷூக்கு மேலும் ஒரு வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The D-mania is about to begin 😎#VaathiTrailer releasing on 𝐅𝐄𝐁 𝟖𝐭𝐡 💥@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @adityamusic @SitharaEnts @Fortune4Cinemas @7screenstudio #SrikaraStudios#Vaathi pic.twitter.com/rSL6exfDx9
— Seven Screen Studio (@7screenstudio) February 6, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments