மூன்றே நாட்களில் தனுஷின் 'வாத்தி' வசூல் இத்தனை கோடியா? திரையுலகினர் ஆச்சரியம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியான நிலையில் இந்த படம் வெள்ளி, சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவான ‘வாத்தி’ திரைப்படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் கடந்த வெள்ளி அன்று வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்திற்கு விமர்சகர்கள் பாசிட்டி விமர்சனங்களை கொடுத்ததை அடுத்து குடும்பம் குடும்பமாக இந்த படத்துக்கு ஆடியன்ஸ்கள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘வாத்தி’ திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் முதல் நாளிலேயே ரூபாய் 8 கோடி ரூபாய் வசூல் ஆனதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மூன்று நாட்களில் இந்த படம் 40 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 100 கோடி வசூலை எட்டிய நிலையில் இன்னும் சில நாட்களில் ‘வாத்தி’ திரைப்படமும் 100 கோடியை நெருங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷின் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெற்றி பெற்று வருவதை அடுத்து அவரது மார்க்கெட்டும் உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் நடித்த நடித்துவரும் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் வியாபாரம் ’திருச்சிற்றம்பலம்’ ‘வாத்தி’ வெற்றி காரணமாக மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Rocking both languages with extremely good collections … #sir #vaathi @dhanushkraja @SitharaEnts #venkyatluri @iamsamyuktha_ @NavinNooli @vamsi84 pic.twitter.com/YYXJ5Wx9F7
— G.V.Prakash Kumar (@gvprakash) February 19, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments