'வாத்தி' படத்தின் சிங்கிள் அப்டேட்: பாடலை எழுதியது இந்த பிரபலமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார்
இந்த நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் ‘வாத்தி’ படத்தின் சிங்கிள் பாடல் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். மேலும் இந்த பாடலை தமிழில் தனுஷ் எழுதி உள்ளதாகவும் தெலுங்கில் ராமஜோகையா சாஸ்திரி எழுதி உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். . ஏற்கனவே தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’, ’நானே வருவேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ள நிலையில் ‘வாத்தி’ தனுஷின் ஹாட்ரிக் வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The first single from #Vaathi #SIRMovie written by our @dhanushkraja (Tamil) & @ramjowrites ( Telugu ) is all set to release on November 10th#VenkyAtluri @iamsamyuktha_ @_ShwetaMohan_ @vamsi84 @adityamusic @dopyuvraj @NavinNooli #SaiSoujanya @Fortune4Cinemas @SitharaEnts pic.twitter.com/5opRKWbKbA
— G.V.Prakash Kumar (@gvprakash) November 6, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com