தனுஷின் 'வாத்தி' படத்தின் செம அப்டேட்.. கலக்கிய ஜிவி பிரகாஷ்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ‘வாத்தி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது என்பதும் இந்த பாடலை தனுஷ் எழுதிய நிலையில் ஸ்வேதா மேனன் பாடி இருந்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ’நாடோடி மன்னன்’ என்ற பாடல் வரும் 17ஆம் தேதி அதாவது நாளை வெளியாக இருப்பதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த பாடலை எதிர்நோக்கி தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. பிரபல தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் தனுஷ், சம்யுக்தா ஹெக்டே, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிய இந்த படம் இந்த ஆண்டின் முதல் வெற்றி படமாக தனுஷ்க்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீம பூராவும்
— G.V.Prakash Kumar (@gvprakash) January 16, 2023
சுத்தி வரும் காட்டாறு
எங்க நின்னாலும்
அந்த இடம் என் ஊரு - #yugabarathy #vaathi #naadodimannan #banjara @dhanushkraja @SitharaEnts #venkyatluri @vamsi84 pic.twitter.com/dlvq2aLwLw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments