close
Choose your channels

தனுஷின் 'வாத்தி' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பா? படக்குழுவினர்களின் அதிரடி பதில்!

Sunday, October 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முதல் சமூக வலைதளங்களில் ‘வாத்தி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி அல்லது பிப்ரவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இதற்கு படக்குழுவினர் அதிரடி பதிலளித்துள்ளனர்.

தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாத்தி’ திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிராபிக்ஸ் பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை மற்றும் சாட்டிலைட் உரிமை ஆகியவை விற்பனை செய்து விட்டதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் இந்த படம் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிய தாமதமாகும் என்பதால் இந்த படம் ஜனவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை படக்குழுவினர் மறுத்துள்ளனர். ‘வாத்தி’ திரைப்படம் திட்டமிட்டபடி டிசம்பர் 2ஆம் தேதி கண்டிப்பாக வெளிவரும் என்றும் ரிலீஸ் தேதியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ‘வாத்தி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 2 என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’, ’நானே வருவேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ள நிலையில் ‘வாத்தி’ தனுஷின் ஹாட்ரிக் வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment