தனுஷின் 'வாத்தி' ரிலீஸ் தேதி அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ‘வாத்தி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்க பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது/ இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் பொங்கலுக்கு பிறகு தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரையும் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தாண்டு வெளியாகும் முதல் தனுஷ் படம் ‘வாத்தி’ என்பதால் இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’, ’நானே வருவேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ள நிலையில் ‘வாத்தி’ தனுஷின் ஹாட்ரிக் வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Vaathi / #SIR Movie going to hit the theaters on 17 Feb 2023. ♥️#VaathiOn17Feb / #SIROn17Feb@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @SitharaEnts @Fortune4Cinemas #SrikaraStudios @adityamusic @AdityaTamil_ pic.twitter.com/69YOuvpEqs
— Sithara Entertainments (@SitharaEnts) November 17, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com