தனுஷின் 'வாத்தி' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த 'நானே வருவேன்’ திரைப்படம் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் நடித்த இன்னொரு திரைப்படமான ’வாத்தி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் வெங்கி அட்லுரி என்பவர் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீசாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது டிசம்பர் 2ஆம் தேதி இந்த படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் செய்யக் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி ஆன நிலையில் ’நானே வருவேன்’ மற்றும் ’வாத்தி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றால் தனுஷ்க்கு இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Mark the Date. Our Vaathi / SIR is getting ready to take classes from 2nd Dec 2022! ????️✨ #SIRMovieOn2ndDec #VaathiOn2ndDec @dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @Fortune4Cinemas @SitharaEnts #SrikaraStudios pic.twitter.com/6QK192M8xx
— G.V.Prakash Kumar (@gvprakash) September 19, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com