ரூ.100 கோடி வசூல் செய்த தனுஷின் 'வாத்தி' எந்த ஓடிடியில் ரிலீஸ்? தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ‘வாத்தி’ என்ற திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் வெளியான 2 வாரத்தில் 100 கோடி ரூபாய் என்ற வசூல் சாதனையை எட்டியது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘வாத்தி’ திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீசாக இருப்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தனுஷ், சம்யுக்தா மேனன் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவான ‘வாத்தி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டை பெற்ற நிலையில் இந்த படம் அடுத்ததாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படம் வரும் 17ஆம் தேதி வெளியாகும் என்றும் ரசிகர்கள் ‘வாத்தி’ படத்தை வீட்டிலிருந்து ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17ஆம் தேதி ரிலீசான ‘வாத்தி’ திரைப்படம் சரியாக ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தனுஷ், சம்யுக்தா, சாய்குமார், சமுத்திரகனி, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
If Dhanush was our #Vaathi, we’d be ready to give up P.T period to attend his class!📚 🏫
— Netflix India South (@Netflix_INSouth) March 12, 2023
Vaathi is coming to Netflix on the 17th of March! 🤩 pic.twitter.com/GJbqgZ0zFY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com