தனுஷின் 'வாத்தி' அட்டகாசமான தீபாவளி போஸ்டர்: ரசிகர்கள் குஷி!

  • IndiaGlitz, [Monday,October 24 2022]

தனுஷ் நடித்துவரும் ‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் விரைவில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் திரையரங்கு ரிலீஸ் உரிமை உள்பட ஒருசில உரிமைகளின் வியாபாரமும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ் நடித்த ‘வாத்தி’ படத்தின் தீபாவளி சிறப்பு போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய அட்டகாசமான போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.


 

More News

கைமாறுகிறதா 'சங்கமித்ரா': பிரமாண்டமாக தயாரிக்க திட்டம்!

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 'சங்கமித்ரா' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு வந்தது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

விக்ரமின் மிரட்டும் கெட்டப்.. பா ரஞ்சித் படத்தின் டைட்டில் டீசர்!

 விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய டீஸர்

ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய டிஸ்னி+  ஹாட்ஸ்டாரின் அனிருத் மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சி 

சென்னையில் அக்டோபர் 21 அன்று நடைபெற்ற, பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் 'ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்' மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சியில், அனிருத்தின்  சார்ட்பஸ்டர் பாடல்களை

'ஆர்.ஆர்.ஆர்' படம் பார்க்க ரூ.3,57,268 செலவு செய்த ஜூனியர் என்.டி.ஆர் மனைவி!

'ஆர்.ஆர்.ஆர்' படம் பார்க்க ஜூனியர் என்டிஆர் மனைவி ரூ.3,57,268 செலவு செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

'இப்படி ஒரு விஷயம் நம்ம கண்ணு முன்னாடி நடந்துகிட்டே இருக்குது: 'கலகத்தலைவன்' டீசர்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் 'கலகத்தலைவன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன்