close
Choose your channels

வியாபாரத்தை தொடக்கினார் தனுஷின் 'வாத்தி': ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா?

Thursday, October 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ மற்றும் ’நானே வருவேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய ஹாட்ரிக் வெற்றி படமாக ‘வாத்தி’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஐரோப்பிய நாடுகளின் திரையரங்கு ரிலீஸ் உரிமை வியாபாரம் ஆகிவிட்டதாகவும் இந்த உரிமையை 4 சீசன் கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து அடுத்தடுத்த ரிலீஸ் உரிமை குறித்த வியாபாரங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ’திருச்சிற்றம்பலம்’ மற்றும் ’நானே வருவேன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல வசூல் செய்த நிலையில் ‘வாத்தி’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படமும் வசூலில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment