'எண்ணம் போல் வாழ்க்கை': தனுஷின் 'வாத்தி' செம அப்டேட்..!

  • IndiaGlitz, [Wednesday,February 01 2023]

தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் இறுதி கட்ட போஸ்ட் புரடொக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது. பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தொடங்கப்பட்டுவிட்டன.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பில் ‘வாத்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த விழாவில் தனுஷ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உட்பட குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.

இது குறித்து வெளியான வீடியோவில் ’எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல் தான் வாழ்க்கை அதுதான் உண்மை, என் எண்ணம் என் ரசிகர்களின் மீது, அவர்கள் தான் என் வாழ்க்கை’ என்ற ஆடியோ உடன் கூடிய வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிரபல தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் தனுஷ், சம்யுக்தா ஹெக்டே, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிய இந்த படம் இந்த ஆண்டின் முதல் வெற்றி படமாக தனுஷ்க்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'தளபதி 67' படத்தில் இந்த ஹீரோவும் இல்லை.. உறுதி செய்த படக்குழுவினர்!

 தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தகவல்களும் இன்னொரு பக்கம் விறுவிறுப்பாக

இதற்காகத்தான் காத்திருந்தோம்.. 'தளபதி 67' படத்தின் செம வீடியோ..!

தளபதி விஜய் நடித்துவரும் 'தளபதி 67' படத்தின் அப்டேட்டுகள் நேற்று மாலை முதல் வெளியாகி வருகிறது என்பதும் இதன் காரணமாக 'தளபதி 67' ஹேஷ்டேக் நேற்று முதல்  டிரெண்ட் ஆகி வருகிறது என்பது தெரிந்ததே. 

'பையா 2' படத்தில் கார்த்தியும் இல்லை, தமன்னாவும் இல்லை.. லிங்குசாமி செம பிளான்..!

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவான 'பையா' திரைப்படம் கலந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் கார்த்தி மற்றும் தமன்னா நடித்த இந்த படம் வசூலை வாரி குவித்தது

'சூர்யா 42' படம் குறித்த வதந்தி.. விளக்கமளித்த தயாரிப்பாளர்!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' என்ற திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது என்பதும் இதுவரை இல்லாத அளவில் 13 மொழிகளில் உருவாகி வரும்

14 ஆண்டுகளுக்கு பின் விஜய் படத்தில் மீண்டும் த்ரிஷா.. படக்குழு வெளியிட்ட சூப்பர் வீடியோ!

தளபதி விஜய் நடித்துவரும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர் என்பது தெரிந்ததே.