தனுஷின் 'வாத்தி' திரைப்படத்தின் வசூல் இத்தனை கோடியா? அதிகாரபூர்வ அறிவிப்பால் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ‘வாத்தி’ திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீசான நிலையில் இந்த படம் ஒரே வாரத்தில் வசூலித்த தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவான ‘வாத்தி’ திரைப்படம் தமிழ் தெலுங்கு மொழிகளில் கடந்த 17ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி வெளியானதுமே விமர்சிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக குடும்பம் குடும்பமாக ஆடியன்ஸ்கள் இந்த படத்திற்கு குவிந்து வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழ் தெலுங்கு மொழி ஆகிய இரண்டு மொழிகளில் ‘வாத்தி’ திரைப்படம் முதல் நாளிலேயே 8 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் 3 நாட்களில் 40 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் ஒரே வாரத்தில் ‘வாத்தி’ படம் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு இன்னும் ரசிகர்கள் குவிந்து வருவதை அடுத்து 100 கோடி என்ற வசூலை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ், சம்யுக்தா, சாய்குமார், சமுத்திரகனி, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படம் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Our beloved #Vaathi / #Sir has garnered unconditional love ❤️ & 75+ crores gross worldwide 💸
— Sithara Entertainments (@SitharaEnts) February 25, 2023
Blockbuster Classes All Over! 🌎@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @iSumanth @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @SitharaEnts @7screenstudio @adityamusic pic.twitter.com/shZXZXBTiP
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments